இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 2 ஆயிரத்து 982 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயு விலை 83 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ஆயிரத்து 198 ரூபாவாகும்.
2.3 கிலோ ம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 37 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 561 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘லாப்’ சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.