844 பேர் நேற்று கைது – இன்றும் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 844 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நகர்பகுதிகளை நோக்கி காலைவேளையிலேயே வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன், விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles