87 ஆயிரம் பெருந்தோட்ட பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை!

பெருந்தோட்டத்துறை நிர்வாகம் முறையாக கவனிக்காததால் பெருந்தோட்டத்துறையில் தொழில்புரியும் பெண்களில் 87 ஆயிரம் பேர் மத்திய கிழக்கில் பணிப்பெண்களாக வேலைசெய்கின்றனர் என்று தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் அநீதியான முறையில் நடாத்தப்படுவதை தவிர்க்க புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுமெனவும் அவர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து கிடைத்துள்ள முறைப்பாடுகள் சம்மந்தமாக தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்களின் தலைவர்களுடன் தொழில் திணைக்களத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களுகளுக்கு பல்வேறு அநீதிகள், அச்சுறுத்தல்களை இழைப்பதாக பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களை தொழில் சட்டதிட்டங்களின் படி முறையான தொழில் நிலையை ஏற்படுத்தித் தருவதற்காக புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தோட்ட கம்பனி பிரதிநிதிகள் சில தோட்டங்களில் இவ்வாறு தொழில் சட்டங்களை மீறும் சம்பவங்கள் இடம்பெறுவதாக ஏற்றுக்கொண்டனர்.

தொழில் அமைச்சின் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் உறுப்பினராகவுள்ள தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர்கள் வழங்கும் சந்தா பணத்தை தொழிற்சங்கங்களின் கணக்குகளுக்கு வைப்பிலிட தோட்டக் கம்பனிகள் பின் நிற்பதால் இந்த சந்தா பணத்தை தொழிற்சங்கங்களின் வங்கி கணக்கில் வைப்புச் செய்வதை உறுதிப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்படுமென தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் அவர்களது தொழில் பாதுகாப்புக்காக விசேட புதிய சட்ட மூலம் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தேயிலை பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதால் தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பேச்சில் அமைச்சின் செயலாளர் யாப்பா பத்திரன மற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரும் தோட்ட முதலாளிமார் சங்க பிரதிநிதிகளும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles