88 வாக்குகளால் அம்பாறையில் ஆசனத்தை தவறவிட்ட சிலிண்டர்!

பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி நான்கு ஆசனங்களுடன் மாவட்டத்தைக் கைப்பற்றியது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொண்டது.

அந்தக் கட்சி  ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 313 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது .

அடுத்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46 ஆயிரத்து 899 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33 ஆயிரத்து 911 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும், இலங்கைத்  தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 7 ஆசனங்களுக்காக 640 பேர் போட்டியிட்டார்கள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட ஆக 129 வாக்குகளால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்ந்துள்ளது. அதேவேளை ஆக 88 வாக்குகளால் புதிய ஜனநாயக முன்னணி தோல்வியைத் தழுவியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 33 ஆயிரத்து 632 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 33 ஆயிரத்து 544 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் எதையும் பெறவில்லை. ஆனால், இம்முறை தேர்தலில் முன்னாள் எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்கின்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles