சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது. இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.
நிகழ்நிலைக் காப்பு சட்டம்; தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகள் சில உள்வாங்கப்படாமல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதில் கையொப்பமிட்டு சபாநாயகர் அரசமைப்பையும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறியுள்ளார் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொலிஸ்மா அதிபர் நியமனம்கூட அரசமைப்புக்கு முரணாகவே இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.
இவற்றை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுகின்றது.










