துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தீ பரவியமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.