இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (18) 14 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 11 ஆயிரத்து 830 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏ
இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 162 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 105 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.