தோட்ட தொழிலாளிமீது தாக்குதல்: விசாரணை அறிக்கை கோருகிறார் சாகல

இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளியான பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட மைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார்,ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து இரத்தினபுரி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சாகல ரத்நாயக்க, உடனடி நடவடிக்கை்கு அறிவுறுத்தல் வழங்கியதுடன் இது தொடர்பில் அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்குமாறும் அறிக்கையொன்றை கோருமாறும் ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்புகளுக்கான ஆலோசகர் சமன் ரத்னப்பிரியவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி இந்த அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles