நியூசிலாந்து அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளில் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 150 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று, தோல்வியடைந்தது.

Related Articles

Latest Articles