மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பலி!

அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று காலை நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

சிவகரன் – ஜீவரஞ்சனி தம்பதியி னரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார்.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்குத் தெரிவான இரண்டு மாண வர்களுள் அக்சயன் ஒருவராவார். இவர் அண்மையில் வெளியான 2023 (2024) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெற்று அம்பாறை மாவட்டத்தில் 23 ஆவது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று அங்கு தரிசித்துவிட்டு இன்று வெள்ளிக் கிழமை காலை வரும்போது பொத்து வில் மற்றும் லாகுகலைக்கிடையி லுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடியபோது மூழ்கி மரணமானார்.

அவரது சடலம் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகு கலை வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.
மருத்துவத்துறைக்குத் தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி இறைபத மடைந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி யது. முழுக் காரைதீவு பிரதேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

Related Articles

Latest Articles