“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தற்போது யார் என்ன கதைத்தாலும் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்திய தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒத்துழைப்பு வழங்கும். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் எமது உறுப்பினர்கள் பேச்சு நடத்திவருகின்றனர். மறுபுறத்தில் கட்சியையும் பலப்படுத்திவருகின்றோம்.
கட்சி என்ற வகையில் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். தற்போது 13 பற்றி பேசினாலும் வடக்கில் தோல்வி என தெரிந்தும் மாகாணசபைத் தேர்தலை நடத்திய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சதான். அதன்பிறகு வடக்கில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தலை ஒத்திவைக்க முற்படும் கட்சிகள் காணாமல்போகும் என்பதே வரலாறு. தேர்தலை அன்று ஒத்திவைத்ததால் கடந்தமுறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனத்துக்கு கீழிறங்கியது.” – என்றார்.