எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழ் பொதுவேட்பாளர் என்ற சிந்தனையை தாம் ஆதரிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
அதேவேளை என்னைவிட சிறந்த தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அவரை ஆதரிக்கவும் தயாராகவே இருப்பதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.