நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று (17) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நானுஓயாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் மேற்கொண்டு மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் முச்சக்கரவண்டிச் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles