காசா, லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது! பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்

லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாப்பதற்கே இந்த இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கைவிடும் வரை லெபனானிலிருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் இஸ்ரேலிய அரசு உறுதியாக உள்ளது.

அதே வேளையில், தங்களுக்கு எதிராக ஈரான் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் அந்நாட்டின் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது காசாவின் பெரும்பகுதியையும் சிரியாவின் சில எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல், அங்கிருந்து படைகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது.

Related Articles

Latest Articles