டித்வா பேரிடரையடுத்து அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டம் இனிமேல் நீடிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேற்படி காலப்பகுதியில் அவசரகாலச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










