பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால், அது குறித்து, ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
