பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்டச் சென்றபோது புடையன் பாம்பு தீண்டியுள்ளது.

அதையடுத்து அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles