தாயை கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது!

தனது தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாயின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரயை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொசன் பௌர்ணமி தினமான 21 ம் திகதி இரவு மகனுக்கும் தாய்க்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் பின்னர் குறித்த பெண்ணின் மகன் கல்லால் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் , கல்லால் தாக்கப்பட்ட பெண் பலத்த காயமடைந்ததாகவும் சிகிச்சைகளுக்காக கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட காணி தகராறு கொலையில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles