ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
விசேட கூட்டமொன்றை நடத்தி வேட்பாளரை பெயரிடுவதற்கும் மொட்டு கட்சி திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்பதாலேயே மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க கட்சிக்குள் ஆதரவு வலுத்துள்ளது.
அத்துடன், மொட்டு கட்சியின் இந்த முடிவால் அக்கட்சி பிளவை சந்திக்கவுள்ளது எனவும் தெரியவருகின்றது.