எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் இந்தியா செல்லவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவர் டில்லி செல்வார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
“ இந்தியா வருமாறு எமது தலைவருக்கும் அழைப்பு கிடைத்துள்ளது. அந்த அழைப்பையேற்று அவர் டில்லி செல்வார். அதற்கான திட்டமிடல் இடம்பெற்றுவருகின்றது. தேர்தலுக்கு முன்னரே அவரின் விஜயம் இடம்பெறும்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.