தலவாக்கலையில் தீ விபத்து: 5 லயன் குடியிருப்புகள் சேதம் – 41 பேர் நிர்க்கதி!

தலவாக்கலை, பெயாபீல்ட் தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதனால் 41 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், லயன் அறைகளில் இருந்த ஆவணங்கள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாகியுள்ளன எனக் கூறப்படுகின்றது.

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நிர்க்கதியாகியுள்ள மக்கள் தோட்ட ஆலத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நமது நிருபர்கள்

Related Articles

Latest Articles