தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை, அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் ஏற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படும். அதற்குரிய நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும்.

தேர்தலை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்துவருகின்றது. ஒத்திவைப்பதற்கு முற்படுகின்றதெனில் எதற்காக ஏற்பாடுகளை செய்ய வேண்டும்? தேர்தலை பிற்போட அரசு முற்படவில்லை. அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பான புதிய கூட்டணியின் நிலைப்பாடு தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னரே அறிவிக்கப்படும்.

கோட்டாபய ராஜபக்சவை விரட்டுவதற்காக செயற்பட்டவர்களே இன்று எதிரணி பக்கம் உள்ளனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles