அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: பின்னணியில் கஞ்சிபானி இம்ரான்?

அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உட்பட 2 பேர் கொல்லப்பட்டதுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதல் வெளிநாடொன்றில் இருந்து திட்டமிட்டு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இக்கொலை சம்பவம் தொடர்பில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானால் இத்தாக்குதல் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு இருக்கின்றது.

Related Articles

Latest Articles