நுவரெலியா மாநகர சபையின் கழி அகற்றும் பௌசர் மோதி இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக வேக கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதி மீண்டும் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில் நடந்து சென்ற இருவர் மீது பௌசர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இன்று (12) இடம்பெற்றுள்ளது. மாநகர சபை வாகனத்தை செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
