தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால்கூட அது போதுமானதாக இருக்காது. இந்நிலையில் அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க கம்பனிகள் மறுப்பது பெரும் அநீதியாகும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களால் நாட்டுக்கு அந்நிய செலாவணி வருகின்றது. எனவே, அவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சி அன்று முதல் இன்றுவரை மலையக மக்களுக்காக குரல் கொடுத்துவருகின்றது. அந்தவகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம்.” – எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles