அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பிரதம நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே மனு விசாரணையின்றியே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மனு தாரர் வழக்கு கட்டணமாக 5 லட்சம் ரூபா செலுத்த வேண்டும், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
