தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்திருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவால் வெற்றிபெறமுடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த ஜனாதிபதி தேர்தலைவிட இம்முறை கூடுதல் வாக்குகளை அநுரகுமார திஸாநாயக்க பெறுவார். ஆனால் அவரால் வெற்றி இலக்கை அடையமுடியாது. 70 லட்சம் வாக்குகளை அவரால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.
சஜித் பிரேமதாசவே நிச்சயம் வெற்றிபெறுவார். 55 லட்சம் வாக்குகளில் இருந்தே அவரது பயணம் ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்றே கருதுகின்றேன். மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் ரணில் நான்காவது இடத்துக்கு தள்ளப்படுவார்.
இரண்டு வருடங்களில் மொட்டு கட்சியை ரணில் ஆட்டம் காண வைத்தார். எனவே, அவருக்கு ஆதரவு வழங்குவதில் உள்ள ஆபத்து மொட்டு கட்சிக்கு தெரியும். எனவே, தம்மிக்க பெரேராவை அக்கட்சி நிறுத்தும்.” – என்றார்.










