ரூ. 1700 வேண்டும்: கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சாமிமலை, பெயலோன் தோட்டத்தில் ஐந்து பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பகுதியில் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது. இதனால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முடிந்தால் இவ்வாறான மழை காலத்தில் தேயிலை மலைக்குள் இறங்கி ஒரு மணிநேரம் கொழுந்து கொய்து காட்டுமாறு ரொஷான் ராஜதுரைக்கு தொழிலாளர்கள் சவால் விடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல், உடன் ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
மஸ்கெலியா நிருபர்

Related Articles

Latest Articles