செப்டம்பர் 28 ஜனாதிபதி தேர்தல்?

எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு இன்று ஊடக சந்திப்பை நடத்தியது. தேர்தலுக்கான கால எல்லை தொடர்பிலும் தகவல்கள் வழங்கப்பட்டன. அந்தவகையில் செப்டம்பர் 28 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம்.” – எனவும் அநுர குறிப்பிட்டார்.

அதேவேளை, இன்றைய கண்டி கூட்டத்துக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருவதாக கூறி இருந்தார், அவர் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார் அநுரகுமார திஸாநாயக்க.

Related Articles

Latest Articles