“நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். நாம் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மனோ கணேசனிடம், ஜனாதிபதி தங்களின் ஆதரவை கோரினாரா என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த மனோ, ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசப்படவில்லை. பெருந்தோட்ட பகுதிகளை கிராமங்களாக அறிவிக்கும் உத்தேச திட்டம் பற்றியே கலந்துரையாடப்பட்டது என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் யாருக்கு ஆதரவு என எழுப்பட்ட கேள்விக்கு,
நாங்கள் இருக்கும் இடம் தெரியும்தானே, ஐக்கிய மக்கள் கூட்டணி. நாங்கள் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர் என மனோ பதிலளித்தார்.
