ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று மாலை( 20) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர் .

25 வயதுடைய மஹியங்கனை சொரபோர பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தெஹிவளை பகுதியில் இருந்து ஐஸ் போதைப் பொருளை கொண்டு வந்து மஹியங்கனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மஹியங்கனை பொலிஸார் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது .

அத்தோடு சந்தேக நபர் தொடர்பில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 15 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கையடக்க தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பலிபான ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ எம் விஜேரத்ன தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles