தேர்தலை பிற்போட முற்பட்டால் பங்களாதேஷ் நிலையே இலங்கையில் ஏற்படும்!

ஜனாதிபதி தேர்தல் ஏதேனுமொரு வழியில் பிற்போடப்படுமானால் இன்று பங்களாதேஷில் நடப்பதுதான் நாளை இலங்கையிலும் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவை கைகூடவில்லை. அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தால்கூட தேர்தல் ஒத்திவைப்பதற்குரிய சாத்தியம் குறைவு.

அரசமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும், அதற்காக இறுதிவரை காத்திருக்க முடியாது. மீள் வாக்கெடுப்பை நடத்த வேண்டிய தேவை ஏற்படின் இரு வாரங்கள் அவசியம். எனவே, ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அந்தவகையில் செப்டம்பர் 21 அல்லது 28 இல் தேர்தல் நடத்தப்படாக வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் வேறு ஏதேனும் வழியில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி எடுக்கப்பட்டால் பங்களாதேஷில் இன்று நடப்பது, நாளை இலங்கையில் நடக்கலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles