தோட்ட தொழிலாளர்களுக்கு காணி, வீடு வழங்குவேன்!

” எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும். தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார். குடியுரிமை குறித்து பேசும் போது, காணி உரிமை இல்லாத குடியுரிமை பயனற்றது. எமது நாட்டின் பிரஜைகள் தமது சொந்த காணியிலும், வீட்டிலும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இது அவர்களது அடிப்படை உரிமை.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன. எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பைப் போல, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல், விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும் போது, ஒவ்வொரு ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார். இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும்.” – எனவும் அவர் இடித்துரைத்தார்.

Related Articles

Latest Articles