திட்டம் என்ன? 27 ஆம் திகதி ரணில் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் முதலாவது பிரதான மக்கள் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோரின் ஏற்பாட்டில் காலியில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாரம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். எனினும், காலி கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை விடுக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என கோரி கம்பஹா, கடவத்தையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles