450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் குறைந்துள்ள நிலையிலேயே பாண் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.