பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா வழங்கி இருந்தது. அந்த தொகையை 600 மில்லியன் ரூபாவாக இந்தியா அதிகரித்துள்ளது.
இதற்கடைய ஏற்புடைய ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.