கட்சிகள் என்ன முடிவெடுத்தாலும் மக்கள் ஆதரவு ரணிலுக்கே

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்கும் முடிவை நாட்டு மக்கள் எடுத்துவிட்டனர் – என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

அத்துடன், கட்சி பற்றியோ அல்ல அரசியல் நலன்கள் குறித்தோ சந்திக்கும் நேரம் இதுவல்ல எனவும், நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமே இதுவெனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்துள்ள முடிவு சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுப்பையா ஆனந்தகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாடு பற்றியெரியும் வேளையிலேயே சவால்களுக்கு மத்தியில் நாட்டை எமது ஜனாதிபதி பொறுப்பேற்றார். ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மை ஆதரவை வழங்கியது. அதனை நாம் வரவேற்கின்றோம்.

தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை கட்சி என்ற வகையில் அக்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது. எனினும், இது இணைந்து பயணிக்க வேண்டிய தருணம். ஆதனால்தான் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எனவே, கட்சியின் எதிர்காலம் பற்றி அல்லாமல் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுத்திருந்தால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவையே அக்கட்சியினர் எடுத்திருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
கட்சிகள் எத்தகைய முடிவுகளை எடுத்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குரிய ஆளுமையும், அனுபவமும் தற்போதைய ஜனாதிபதிக்கே இருகின்றது. எனவே, புதிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து பரீட்சியம் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல. கட்சிகளும் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

சுயநல அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில் உண்மையைக்கூறி பொதுநல அரசியல் நடத்தும் ரணிலின் கொள்கையே நாட்டுக்கு தேவை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles