எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சுயாதீன வேட்பாளராக களமிறங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் கட்டுப்பணம் செலுத்தவுள்ளார்.