முறிந்தது அரசியல் உறவு!

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதன்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். பொளாதார சவால்கள் உட்பட அதற்கார காரணங்களையும் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

எனினும், கட்சி எடுத்த முடிவை தன்னால் மாற்ற முடியாது எனக்கூறி, ஜனாதிபதியின் கோரிக்கையை மஹிந்த ராஜபக்ச நிராகரித்துவிட்டார் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles