சஜித்துக்கு ஆதரவளிக்க சு.கவின் தயாசிறி அணி முடிவு!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகர அணியினர் தீர்மானித்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டப்பூர்வமான செயலாளர் தான்தான் என தயாசிறி ஜயசேகர அறிவித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா ஜனாதிபதி ரணிலுக்கும், மைத்திரிபால தரப்பு, விஜயதாச ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்துள்ளன.

Related Articles

Latest Articles