கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரால், அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க கட்சி முடிவெடுத்துவிட்டதால் வேறு வேட்பாளருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
