வடக்கில், 07 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்துள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர். இரணைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர் அதில், சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 176 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
இதன் பெறுமதி ஏழு கோடி ரூபாவென கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதில்,மூன்று சந்தேக நபர்களும் கைதாகினர்.
கைதானவர்கள் மன்னார் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 22 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
