கட்டுப்பணம் செலுத்தினார் அநுர

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இன்று செலுத்தியுள்ளார்.

அவர் சார்பில் கட்சி பிரமுகர்களும், சட்டத்தரணிகளும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று வருகை தந்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு இதுவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட 18 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதியாகும்.

Related Articles

Latest Articles