எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் 100 பிரதான கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்று முதல் சஜித் தலைமையில் 100 பிரதானக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் நின்றுவிடாது 160 தேர்தல் தொகுதிகளில் மத்திய மட்டத்தில் 400 முதல் 600 வரையான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அதேபோல கிராமிய மட்டங்களில் தெளிவுபடுத்தல் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.” – என்றார்.
