ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
ஆன்மீக வழிபாடுகளின் பின்னர், சுபநேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவே களமிறங்கவிருந்தார்.எனினும், அவர் கடைசி நேரத்தில் பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
