ஐக்கிய மக்கள் சக்தியை பலமானதொரு அரசியல் இயக்கமாக கட்யெழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள சஜித் பிரேமதாச, நேற்று தொழிற்சங்க பிரிவுகளையும் நிறுவியுள்ளார்.
ஐக்கிய சேவைகள் சங்கம், ஐக்கிய அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய கல்வி சேவை சங்கம் ஆகியனவே இன்று நிறுவப்பட்டன. அடுத்துவரும் நாட்களில் ஏனைய தொழிற்சங்க பிரிவுகள் உருவாக்கப்படும் என தெரியவருகின்றது.
ஐக்கிய சேவைகள் சங்கத்தின் தலைவராக அசோக அபேசிங்கவும், ஐக்கிய அரச சேவைகள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக முஜிபூர் ரஹ்மானும், ஐக்கிய கல்வி சேவை சங்கத்தின் தலைவராக துஷார இந்துனிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள 2ஆம் நிலை தலைவர்களுக்கே தொழிற்சங்க பிரிவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது