தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா. அரியநேத்திரன் களமிறங்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து உருவாக்கிய தமிழர் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன் தொடராக ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்வதில் இழுபறிகள் இருந்து வந்த நிலையில் தற்போது அரியநேத்திரன் தெரிவுசெய்யப்பட்டு, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
