“ஐக்கிய மக்கள் கூட்டணியானது தேசிய மக்கள் சக்திக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
“ இந்நாட்டை இதுவரையில் நாசமாக்கிய குழுக்கள் புதிய பெயர்களில் கூட்டணிகளை அமைத்துவருகின்றன. அவ்வாறு அமையும் கூட்டணிகள் தேசிய மக்கள் சக்திக்கு சவால் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொன்சேகா வெளியில் இருக்கின்றார், மொட்டு கட்சியின் தவிசாளர் பீரிஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருக்கின்றார், இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறினாலும் மக்கள் எம்முடன் இருக்கின்றனர். மக்களே தீர்மானிக்கும் சக்தி. நாமல் ராஜபக்சவும் எமக்கு சவால் அல்லர்.” – எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.










