எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தான் ஆதரவு வழங்க போவதில்லை என்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா, அத்தனகல தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதாரவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார் என தெரியவருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் சந்திரிக்கா அம்மையாரால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமக்கு விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, அதற்கு தான் எந்தவிதத்திலும் எதிர்ப்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.