பார்பேமிட் கதையை நிரூபித்தால் பதவி விலக தயார்!

“இலங்கையில் ஏதேனுமொரு பகுதியில் எனக்கு ‘பார் பேமிட்’ வழங்கப்பட்டுள்ளது என்பதை தயாசிறி ஜயசேகர உட்பட எவரேனும் நிரூபித்துக்காட்டினால் பதவி விலகுவதற்கு நான் தயார் என்று சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் வேலுகுமார் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு ,

“ குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எவ்வித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார்.
அன்று நாடு நன்றாக இருந்த போது, நல்லாட்சி சரிவராது என்று கோட்டாவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய பங்காளி இவர். இன்று வங்குரோத்தான நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி, வளர்ச்சி பாதையில் ரணில் வழிநடத்தி வருகின்றார். மீண்டும் வந்து இவர் சரிவராது என்று இன்னொரு கோட்டாவை ஜனாதிபதியாக்க தயாசிறி துள்ளி குதிக்கிறார்.

ஆனால் நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் என்பதே உண்மையாகும். அதற்கு அமைய துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன்.

தயாசிறி சொல்வது போல் இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது எனக்கு பார் பேர்மிட் இருக்குமாக இருந்தால் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலக நான் தயாராக இருக்கின்றேன். அதனை தயாசிறி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் முன்வைத்த கூற்றை ஏற்று முதுகெலும்பு உள்ளவராக பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவாரா?

நான் மக்கள் முன் இந்த சவாலை முன்வைக்கின்றேன். ஆனால் எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிலையங்கள் இருக்கின்றதென்பதையும் பச்சோந்தியான தயாசிரிக்கு சொல்லி வைக்கின்றேன். சேறு பூசுவதால் எனது பயணத்தை தடுத்துவிட முடியாது. எனது தெரிவே இந்நாட்டு மக்களின் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் தெரிவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles